Monday, July 10, 2017

GST என்றால் என்ன? நமக்கு பயனுள்ளதாக இருக்குமா????

GST(Goods & Service tax) ஜுலை 1 முதல் இது நமது நாட்டில் அமலுக்கு வந்தது. இது வரி செலுத்துவோரின் வழியை புரட்சிகரமாக மாற்ற இது கொண்டு வரப்பட்டது. அது மட்டும் இல்லமால் வரிகட்டுதலில் ஒரு புதிய சீர்திருத்தத்தை கொண்டு வரும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.  சரி இதனால் மாற்றம் உண்டாகுமா??? இதனால் என்ன பயன் என்று அலசி பார்ப்போமா

பொருளடக்கம்:  

  • ஜிஎஸ்டி என்றால் என்ன?
  • ஏன் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி மிகவும் முக்கியம்?
  • ஜிஎஸ்டி எவ்வாறு வேலை செய்கிறது?

ஜிஎஸ்டி என்றால் என்ன?

  • ஜிஸ்டி(Goods & Service tax) என்பது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பலநிலை இலக்கை  அடிப்படையாக கொண்ட வரி அமைப்பு ஆகும். இது value  addition (கூடுதல் மதிப்பை) கொண்டு அமைய பெற்றுள்ளது.
கீழ்கண்ட  சுழற்சி முறையின் எடுத்துக்காட்டின் மூலம் இதை நீங்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம்.




  •  முதல் பகுதி  மூலப் பொருளை வாங்குதல் இரண்டாவது கட்டம் அதை உற்பத்தி செய்தல் மூன்றாவது கட்டம் அதை சேமிப்பு கிடங்குகளில் அனுப்புவது அல்லது மொத்த விற்பனையாளருக்கு அனுப்புவது . நான்காவது கட்டம் சில்லறை வியாபாரிகளுக்கு அனுப்புவது இறுதியாக end user அதாவது வாடிக்கையாளரை சென்று அடைகிறது. இது தான் ஒரு சுழற்சி முறையாக இன்று வரை நடைபெறுகிறது.
  • இதில் பொருட்கள் மற்றும் சேவை வரிகள் ஒவ்வொரு கட்டத்திலும் விதிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு கட்டத்திலும் (value addition) கூட்டு மதிப்பானது உயர்கிறது.  
  • உதாரணமாக ஒரு உற்பத்தியாளர் சட்டையை தயாரிப்பதாக வைத்துக்கொள்வோம். இதற்கு அவர் முதலில் ஒரு நூலை வாங்க வேண்டும். பிறகு தான் அது சட்டையாக மாறியது.எனவே, நூல் மதிப்பு ஒரு சட்டையுடன் பிணைக்கப்படுகையில் அதிகரிக்கிறது.பின்னர், உற்பத்தியாளர் ஒவ்வொரு சட்டையுடனும் லேபிள்களையும் குறிப்பையும் இணைக்கும் சேமிப்பு கிடங்குக்கு விற்கிறார். அடுத்து அந்த விலையுயர்ந்த மற்றொரு மதிப்பு கூடுதலாக, ஒவ்வொரு சட்டையையும் தனித்தனியே தொகுத்து வைத்திருக்கும் சில்லறை விற்பனையாளருக்கு விற்கிறான், அதன் சட்டை விற்பனையிலும் அதன் மதிப்பு அதிகரிக்கிறது. கீழே உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கே புரியும் 



  • ஒரு பொருள் தயாரிக்கும் முதல் கட்டத்திலிருந்து வாடிக்கையாளர்களை சென்று அடையும் வரை அனைத்து கட்டத்திலயும் value addition ஆனது உள்ளது. இதன் மதிப்பை குறைக்கும் வகையில் தான் ஜிஎஸ்டி ஆனது உருவாக்கப்பட்டுள்ளது. 
  • சரி வாங்க இலக்கு முறை(Destination-Based) அடிப்படையில் ஒரு எடுதுகாட்டினை பார்க்கலாம்.  ஒரு பொருள் தயாரிக்கும் முதல்கட்டத்திலிருந்து இறுதி வரை அனைத்து சங்கிலி தொடரிலும்            சரக்கு   மற்றும் சேவைகளுக்கு வரியானது செலுத்தப்படுகிறது.
  • கீழே உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கே புரியும் 




  • பொருட்கள் மற்றும் சேவை வரிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் விதிக்கபடுகிறது உதாரணமாக ராஜஸ்தானில் ஒரு பொருளானது தயாரித்து தமிழ்நாட்டில் இறுதி வாடிக்கையாளர்களை அடைவதாக கொள்வோம். அங்கு தயாரிக்கும் போது அதற்கான சேவை வரி மற்றும் உற்பத்தி வரி நுகர்வோர் கட்டத்தில் விதிக்கப்படும் என்பதால் அதன் உற்பத்தி மற்றும் கிடங்குகளில் வருவாய் ஆனது ஈட்டப்படுகிறது. ஆனால் தயாரிப்பானு ராஜஸ்தானின் இருந்து  தமிழ்நாடு வரும் வேலையில் விற்பனை மற்றும் சேவை வரியானது இங்கு தனியாக வகுக்கப்படுகிறது மற்றும் இறுதி விற்பனைக்கு இலக்காக்கபடுகிறது. 

ஏன் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி(GST) மிகவும் முக்கியம்?

  • தற்போது சேவை மற்றும் பொருட்களுக்கான வரி முக்கியத்துவம் வாய்ந்தது என்று பார்ப்போம், நமது நாட்டில் வரியானது இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது அவை நேரடி வரி மற்றும் மறைமுக வரி. 
  • இதில் நேரடி வரி என்பது வேறு யாரோ காட்டமுடியாது உதாரணமாக நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் அரசாங்கத்திற்கு வரியானது நேரடியாக நீங்கள் தான் செலுத்த வேண்டும். அதனால் தான் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் குறிப்பிட்ட பகுதி வரியாக பிடிக்கபடுகிறது. 
  • மறைமுக வரி என்பது உங்களுக்கான வரியை வேறு ஒருவரும் செலுத்தலாம். அதாவது ஒரு கடைக்காரர் விற்பனைக்கு  VAT செலுத்தும் போது அவர் வாடிக்கயாளர்களுக்கு கடனை செலுத்துவார். எனவே நடைமுறையில் VAT முறையில் கடனை செலுத்துவதால் அவர் அரசாங்கத்திற்கு வரியை குறைவாக செலுத்தலாம். அதாவது வாடிக்கையாளர் வாங்கும் பொருளில் வரியுடன் பணத்தை செலுத்தபடுகிறது. 
  • இதில் wholesaler இடமிருந்து தயாரிப்பை வாங்கும்  போது அவர் அதற்கு தனியாக வரியை செலுத்துகிறார். அதார்காக retailer   அந்த வரியை VAT அடிப்படையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து  வசுலீத்துவிடுகிறார் 
  •  இது போன்ற சிக்கல்களை தீர்கவே GST ஆனது கொண்டுவரப்பட்டுள்ளது இது உள்ளீட்டு வரி கடன் ஒரு முறை உள்ளது, இது விற்பனையாளர்கள் ஏற்கெனவே செலுத்தப்பட்ட வரிகளை அனுமதிக்க அனுமதிக்கும், இதனால் வாடிக்கையாளர்களின் இறுதி கடமை குறைகிறது.

ஜிஎஸ்டி எவ்வாறு வேலை செய்கிறது?
  • கடுமையான வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகள் இல்லாமல் தேசிய அளவிலான வரி சீர்திருத்தம் செயல்பட முடியாது.
  • ஜிஎஸ்டியானது மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 
  • CGST - CENTRAL  SERVICE TAX : மத்திய அரசு மூலம் வருவாய் பெறப்படும்
  • SGST - STATE SERVICE TAX: உள்நாட்டு விற்பனையால் மாநில அரசுக்கு வருவாய் கிடைக்கும்
பரிவர்த்தனை
புதிய ஆட்சிமுறை
பழைய ஆட்சிமுறை
கருத்துகள்
Sale within the state
CGST + SGST
VAT + Central Excise/Service tax
வருவாய் மையத்திற்கும் மாநிலத்திற்கும் இருக்கும் 
Sale to another State
IGST
Central Sales Tax + Excise/Service Tax
இது வருவாய் முழுவதும் மையத்தை சார்ந்தே இருக்கும் 

EXAMPLE: 

  • உதாரணமாக மஹாராஷ்டிராவில் உள்ள  ஒரு விற்பனையாளர் அதே மாநிலத்தில் ஒரு வாடிக்கையாளரிடம் ஒரு ரூ10000 மதிப்புள்ள பொருளை விற்பதாக வைத்து  கொள்வோம். அதற்கு அவர் 18% வரியை செலுத்த வேண்டும் அதாவது 9% (CGST)மத்திய அரசுக்கும் 9% மாநில அரசுக்கும் என ரூ1800 செலுத்த வேண்டியிருக்கும். 
  • இப்போது மகாராஸ்டிரா விற்பனையாளர் தமிழ் நாட்டிற்கு பொருளை விற்றால் CGST 9 % SGST 9%கொண்டதாகும் . ஆனால் மொத்தமாக சேர்த்து 1800 ரூபாய்  IGST மையத்திற்கு செல்கிறது. இதில் CGST & SGST ற்கு பணத்தினை செலுத்த வேண்டியதில்லை. 
இந்தியா மற்றும் பொதுமக்களுக்கு ஜிஎஸ்டி எவ்வாறு உதவும்?
  • GST ஆனது  ITC (Input Tax Credit) உடன் பின்னி பிணைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு கூட்டு சங்கிலியாக செயல்படுகிறது.   
  • input Tax Credit என்பது உள்ளீட்டு வரிக்கடன் என்று பொருள். அதாவது  ஒரு உற்பத்தியாளர் உள்ளீட்டு பொருட்களுக்கு செலுத்தப்படும் வரி ஆகும். அவர்கள் சொந்த கணக்கில் 10 % வரியானது அரசாங்கத்திற்கு கட்ட வேண்டும் 

கீழ்கண்ட சிக்கலான எடுத்துக்காட்டை பார்த்தால் உங்களுக்கு ஓரளவுக்கு புரிய வாய்ப்புள்ளது.

ஒரு சட்டை உற்பத்தியாளர் 100 ரூபாய் கொடுத்து மூலப்பொருளை வாங்குகிறார் அதற்கு அவர் 10% வரியை சேர்த்து 110 இறுதி மதிப்பாக நிர்ணயிக்கிறார்.

அடுத்த கட்டத்தில் மொத்த விற்பனையாளர்(wholesaler) 110 ரூபாய் கொடுத்து வாங்குகிறார். அதில் லேபிள்களை வைக்கிறார் எனில் அதன் மதிப்பானது 40  ரூபாய் அதிகரிக்கிறது பிறகு அவர் 10 சதவிதம் வரியாக செலுத்துகிறார் என்றால் அதன் மதிப்பு (110 + 40 =) 150 + 10% வரி = ரூ. 165.

அடுத்த கட்டமாக சில்லறை விற்பனையாளர் (Retailer) 165 ரூபாய் கொடுத்து அந்த சட்டையை வாங்குகிறார். பிறகு அவர் அதற்கு தனியாக வரியானது செலுத்த வேண்டும்.அதுக்கு அவர் மேலும் 30  ருபாய் மதிப்பை உடன் சேர்கிறார் பிறகு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய VAT மதிப்பையும் சேர்கிறார் எனில் அதன் மதிப்பானது விலை = ரூ. 165 + மதிப்பு = ரூ. 30 + 10% வரி = ரூ. 195 + ரூ. 19.5 = ரூ. 214.5 என்று வாடிக்கையாளர்களை சென்றடைகிறது. 

Action
Cost
10% Tax
Total
Buys Raw Material @ 100
100
10
110
Manufactures @ 40
150
15
165
Adds value @ 30
195
19.5
214.5
Total
170
44.5
214.5

GSTயில் உள்ளீட்டு வரி (input tax) ஆனது பினைக்கபட்டிருந்தாலும் அந்த வரிக்கு திரும்ப கடனை பெற வழி உள்ளது.

(wholesaler) மொத்த விற்பனையாளர் தயாரிப்பாளரிடமிருந்து  பொருளை வாங்கும் போது    10% வரியை செலுத்துகிறார்.  அதன் விலை 100   என்றால் 10 ருபாய் வரி கட்ட வேண்டும். இப்போது அவர் இந்த பொருளை 40 ருபாய் உயர்த்தி 140  என அதற்கும் சேர்த்து அரசுக்கு வரி  செலுத்த  
வேண்டி வரும். அரசாங்கத்திற்கு வரிக்கு (140 = 10%) ரூபாய்க்கு பதிலாக
செலுத்துவதற்குப் பதிலாக, அவர் ஏற்கெனவே செலுத்திய தொகையைத் திருப்பிக்
கொடுக்கிறார். எனவே, அவர் ரூ. 10 அவர் தனது புதிய கடனாக ரூ. 14 மட்டும் செலுத்துகிறது. 4 ரூபாய் அரசுக்கு செலுத்துகிறார்  10 அவரது உள்ளீடு கடன்(Input credit) ஆகிறது.

இதை இவர் சில்லறை விற்பனையாளுக்கு(Retailer) விற்கும் போது ரூ. (140 + 14 =) 154 என்று விற்க வேண்டும். இப்போது சில்லறை விற்பனையார் அரசுக்கு தனி வரி 
கட்ட வேண்டும். எனில் அவர் அந்த பொருளை 154 +30 = 174 என்று விற்கிறார் . என்றாலும் ஏற்கனவே மொத்த விற்பனையாளர் ஏற்கனவே 10% வரியை அரசுக்கு செலுத்தி விட்டார்.ரூ. (170% 10%) 17 மற்றும் ரூ. 3 அரசாங்கத்திற்கு. எனவே, அவர் அந்த பொருளின் விலை ரூ. (140 + 30 + 17) 187 என வாடிக்கையாளரை சென்று அடைகிறது. 

Action
Cost
10% Tax
Actual Liability
Total
Buys Raw Material
100
10
10
110
Manufactures @ 40
140
14
4
154
Adds Value @ 30
170
17
3
187
Total
170
17
187


முடிவில், ஒரு நபருக்கு உள்ளீட்டு வரிக் கடனைக் கோர முடிந்த ஒவ்வொரு

முறையும், அவருக்கு விற்பனை விலை குறைக்கப்பட்டது மற்றும் குறைவான 

வரி பொறுப்பு காரணமாக அவரது தயாரிப்புகளை வாங்குவதற்கு செலவு 

செய்யும் விலை குறைக்கப்பட்டது. சட்டை இறுதி மதிப்பு ரூ. 214.5 முதல் ரூ. 

187, இதனால் இறுதி வாடிக்கையாளருக்கு வரி சுமையைக் குறைக்கிறது. 

எது எப்படியோ இது நமது இந்தியாவில் சாத்தியமாவது சற்று கடினம் தான். பொறுத்து தான் பார்க்க வேண்டும் என்ன தான் நடக்கும் என்று. எது நடந்தாலும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்வு போராட்டமாக தான் இருக்கும். 

நன்றி : சென்ட்ரல் டாக்ஸ்   









Saturday, February 7, 2015

பிறப்பு இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் எவ்வாறு பெறுவது

  • வணக்கம் நண்பர்களே இன்று ஒரு பயனுள்ள தகவலோடு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது இணையம் சேவை உலகெங்கும் பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அந்த வகையில் இப்போது எல்லாமே ஆன்லைன் மூலம் பெறலாம். 
  •  பிறப்பு இறப்பு சான்றிதழ்களை எப்படி ஆன்லைன் மூலம் பெறலாம் என்பதை காணலாம்.  இதில் நாம் முழுவதுவாக ஆன்லைன் மூலம் பதிவு செய்ய இயலாது ஆனால் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை print out எடுத்து கொள்ளலாம்.  

சான்றிதழ்களை பெற:  


  • இந்த இணைப்பினை கிளிக் செய்து முதலில் open செய்யுங்கள் உங்களுக்கு திரையில் கீழ்கண்டவாறு தோன்றும் 



  • இதில் உங்களுக்கு முதலில் birth certificate வேண்டுமெனில் birth certificate எனும் button ஐ கிளிக் செய்யுங்கள் இப்போது திரையில் கீழ்கண்டவாறு தோன்றும் 

  • சிவப்பு கட்டத்தில்  உள்ளவற்றை fill செய்யுங்கள். பிறகு submit  என்பதை கிளிக் செய்யுங்கள் இப்போது உங்களை போலவே பலர் அந்த தேதியில் பதிவு செய்திருக்கலாம் அதில் உங்களுக்கு தேவையான பெயர் வருகிறதா என்று பாருங்கள். 
  • அப்படி வராத பட்சத்தில்  அதில் advanced search என்பதை பயன்படுத்தி பாருங்கள் அப்படியும் வரவில்லை என்றால் கவலை வேண்டாம் பதிவு அலுவலகத்தில்  சில சமயங்களில் information களை update செய்திருக்க மாட்டார்கள் ஒரு சில நாட்கள் கழித்து இதே போல் தேடி பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு தேவையானது கிடைக்கும் 
  • இதே போல தான் death certificateம் எளிதாக ஆன்லைன் மூலம் பெற்றுகொள்ளுங்கள்  

(நீங்கள் தரவிறக்கம் செய்த print out ஆனது font சில சமயங்களில் தெரியாமல் போகலாம் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்த இணைப்பினை கிளிக் செய்து எழுத்துரு(font)னை download செய்து கொள்ளுங்கள்)



Sunday, December 28, 2014

கணினியில் உள்ள drivers களை எவ்வாறு மறைப்பது


  • வணக்கம் நண்பர்களே பல மாதங்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இவ்வளவு நாட்களாக கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருந்ததால் இந்த பிளாக்கர் பக்கம் வர இயலவில்லை. இன்று ஒரு அற்புதமான பதிவுகளை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்.
  •   உங்கள் கணினியில் உள்ள drivers களை எவ்வாறு மறைப்பது என்பதை பற்றி காண்போம் இதற்கு பல வழிகள் இருக்கலாம் பல மென் பொருட்கள் இருக்கலாம் ஆனால் அந்த மென் பொருட்கள் நாம் காசு கொடுத்து வாங்க வேண்டி வரலாம் அதனால் உங்களுக்கு மிகவும் எளிதான முறையில் எப்படி செய்வது என்பதை கற்று தருகிறேன் 
  • முதலில் Win + R ஐ அழுத்துங்கள் பிறகு அதில் CMD என்று Press செய்யவும் பிறகு comment ஆனது open ஆகும் அதில் கிழ்கண்டவாறு type செய்யவும் 
    • DISKPART என்று type செய்யவும். 
    • பிறகு list Volume என்று type செய்யவும் 
    • பிறகு உங்களுக்கு தேவையான அதாவது நீங்கள் மறைக்க விரும்பும் drive வினை தேர்வு செய்ய வேண்டும் நான் மறைக்க விரும்பும் drive ஆனது E  என்றால் select volume E என்று type செய்யவும். நீங்கள் என்ற driveவினை மறைக்க விரும்புகிறீர்களோ அதை தெரிவு செய்து கொள்ளலாம் அதாவது select  volume D , select  volume F என்று type செய்யவும் 
    • பிறகு Remove letter E என்று type செய்யவும். இப்போது E drive ஆனது இல்லாமல் இருக்கும் 





 மறைத்த driversகளை எவ்வாறு திரும்ப பெறுவது :


    • மேற்கண்டவாறே தொடர்ந்து எல்லாவற்றையும் type செய்து கொண்டே வாருங்கள் 
    • DISKPART -> List Volume -> Select Volume E 
    • இப்போது remove letter E ற்கு பதிலாக Assign Letter E என்று type செய்யவும். இப்ப்போது உங்களுக்கு hide  செய்யப்பட்ட drive ஆனது திரும்ப வந்திருக்கும் 


(குறிப்பு: இதை எப்போதும் அடிக்கடி செய்து பார்க்க வேண்டாம். எப்போதாவது உங்களுக்கு முக்கியமான தருணங்களில் மட்டும் செய்யவும் அடிக்கடி செய்வதன் மூலம் உங்கள் drive ஆனது delete ஆகவும் செய்யலாம் மிகவும் கவனமாக செய்யவும்)

Monday, March 31, 2014

புதிதாக வந்துள்ள nokia x android mobileஐ வாங்க வேண்டாம்




  • வணக்கம் நண்பர்களே தற்போது உலகளவில் android mobile வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இதில் அதிகமாக Samsung நிறுவனம் அதிக mobileகளை  விற்றுள்ளது. Nokia நிறுவனம் windows வகையான mobile களை மட்டுமே தயாரித்து வந்தது. இப்போது nokia நிறுவனத்தை Microsoft நிறுவனம் வாங்குவதாக தெரிகிறது. தற்போது nokia நிறுவனம் x வகையிலான Android mobileகளை முதல் முறையாக வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக times of india பத்திரிக்கை வெளியிட்டுள்ளது 
  • இந்த வகையான mobile களின் விலை 8000 வரை விற்கபடுகிறது இதே விலைக்கு தான் lumia வகையான mobileகள் கிடைக்கின்றன. nokia x மற்றும் nokia x+ என்ற பெயரில் Android mobileகளை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம்  Android version களை முழுமையாக கொண்டிருக்கவில்லை 

Android version முழுயாக்கபடவில்லை:  
  • அதாவது Android version 4.1 வெளியிட்டாலும் google ளின் தளமான google maps, gmail, youtube, google drive இவைகள் எதுவுமே இதில் சரியாக வருவதில்லையாம் google serviceகள் எதுவுமே சரியாக வருவதில்லைஎன்றே கூறலாம். அதுமட்டும் இல்லாமல் தற்போதைய காலத்தில் google மட்டுமே அதிகமாக பயன்படுத்தபடுகிறது இதுவே அதில் சரியாக வருவதில்லை. ஏன் இதில் google product கள் சரியாக தோன்றவில்லை என்று கேட்டால் தற்போது உலகளவில் google, yahoo, bing இந்த மூன்று search engine களுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. Android  google நிறுவனமும்(samsung) windows bing நிறுவனமும்(nokia) இதன் அடிப்படையில் இரண்டிற்கும் இடையே கடும் போட்டி ஆனால் இதில் Android தான் வெற்றி பெற்றது என்றே கூறலாம்.
குழப்பமான பயனர் இடைமுகம்:
  • இந்த வகையான mobileகள் பயன்படுத்துவோரை குழப்பமடைய செய்கிறது. இந்த வகையான மொபைல்கள் nokia asha serious மற்றும் windows apps கலந்து உருவாக்கப்பட்டுள்ளது.  இது நாம் இன்ஸ்டால் செய்யும் application மற்றும் widgetகள் அனைத்தும் ஒரே இடத்தில் சென்று அடையும் இதானால் user எது தரவிறக்கம் செய்தது எது இன்ஸ்டால் செய்தது என்று நம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்தும்  
malwareகளால்பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு:  
  • சாதரணமாக நாம் google store களில் இருந்து தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யும் applicationகளால் அந்த பதிப்பும் வராது மாறாக மூன்றது mobile உங்கள் நண்பரின் mobileகளில் இருந்து applicationகளை உங்கள் mobile இன்ஸ்டால் செய்யும் போது malwareகள் எளிதில் attack ஆகி mobile hang ஆக வாய்ப்பு அதிகம் உள்ளது (malware என்பது ஒரு வகையான வைரஸ்) 
software update: 
  • இது Android version 4.1 அடிப்படையில் உருவாக்கப்பட்டது. nokia மொபைல்கள் நிறைய தானாகவே update ஆகும் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது ஆனால் இதை பொறுத்த வரை இதில் சற்று கடினமே. அதே போல இதில் பயந்ததும் hardwareகள் மிகவும் பழமையானது.
பயமையான வன்பொருள்கள்(hardware): 

  •  nokia x வகையிலான mobileகள் 1 Ghz processor 512 RAM மற்றும் 4 GB expandable memory களை கொண்டுள்ளது ஆனால் nokia x+ மற்றும் XL   இதே போலவே ஆனால் 768 RAM களை கொண்டுள்ளது. இதில் பயன்படுத்தும் வன்பொருள்களை பழமையானது என்றே கூறலாம் அதுமட்டும் இல்லாமல் Android versionனும் பழமையானதே nokia வை பொறுத்தவரை இவை windows mobileற்கு ஏற்ற வகையில் இருக்கும். 
இந்த விலைக்கு இதை விட நல்ல mobileகளும் உள்ளன:
  • இந்த விலைக்கு தற்போது சந்தையில்  Xolo Q800, Zen Ultrafone 701 HD or Micromax Canvas 2 இந்த வகையான mobile கள் கிடைக்கின்றன. nokia x ஐ விட இவை அதிக featuresகளை கொண்டுள்ளது. 
camera quality போதுமானதாக இல்லை:
  • இது வெறும் 3 mp அளவு மட்டுமே கொண்டது அதுமட்டும் இல்லாமல் flash இல்லை fixed focus மட்டுமே கொண்டுள்ளது. இன்றைய கால கட்டத்தில் camera 5 mp ஆவது இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு
google சேவைகள் இதில் பெரும்பாலும் இல்லை:
  • ஏற்கனவே கூறியது போல இதில் google serviceகள் இதில் சரியாக இடம்பெறவில்லை காரணம் இது Microsoft நிறுவனதில் இருந்தது வந்தது அதாவது windows லிருந்து nokia மொபைல்கள் பெருதும் உருவாக்கபடுவதால் தான்.(இருவருக்கும் இடையே ஆனா போட்டியில் google தங்களை விட்டு கொடுக்க கூடாது என்ற காரணத்திற்காக அவர்கள் இதற்கு access தராமல் இருக்கலாம்)
------------------------------------------------------------------------------------------------------------
  • இந்த காரணங்களால் தான் nokia x mobileகள் வாங்க வேண்டாம் என்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இவை சரி செய்யலாம் என்று நினைக்கிறேன். எனக்கு தெரிந்து இது போன்று நடக்க ஒரே காரணம் தான் அவர்களுக்குள்ளே நிறைய competition நிலவி வருகிறது. இந்த விலை கொடுத்து நீங்கள் இது போன்ற mobileகளை வாங்க போகிறீர்களா ????? 



Monday, March 17, 2014

உங்கள் கணினியின் இணையதள வேகத்தை எப்படி அதிகரிப்பது



  • வணக்கம் நண்பர்களே இந்த பதில் எப்படி உங்கள் கணினியின் இணையதள வேகத்தை அதிகபடுத்டுவது மற்றும் அதே சமயத்தில் data usage அதாவது bandwidth எப்படி குறைப்பது என்பதை பற்றி இங்கு பார்க்கலாம் 



அதற்கான வழிமுறைகள்:

  • முதலில் windows > Run செல்லுங்கள் அல்லது Start button + R அழுத்துங்கள் அதில் கீழ்கண்ட சொற்றொடரை கொடுங்கள் 

gpedit.msc

  • அடுத்து அதில் Administrative tools > network > Qos pocket scheduler  செல்லுங்கள் 
  • அடுத்து அதில் மூன்று விதமான option கள் தோன்றும் அதில் முதலில் limit outstanding packet என்று இருக்கும் அதை வலது click செய்து edit என்பதை click செய்யவும் அதில் வலது பக்கம் மேலே not configure , enable, disable என்று மூன்று option கள் இருக்கும் அதில் enable என்பதை தேர்வு செய்யவும் 
  •  அப்படியே சற்று கீழே வந்து number of packets என்பதில் 20 கொடுத்து save செய்து விடுங்கள் 

  • இறுதியாக limit resealable bandwidth என்ற option தேர்வு செய்யுங்கள்  வலது click செய்து edit கொடுங்கள் ஏற்கனவே செய்தார் போல இதிலும் enable என்ற option தேர்வு செய்யுங்கள். அதற்கு கீழே bandwidth limit என்பதில் 0 % கொடுக்கவும் அவ்வளவு தான் எல்லா programகளையும் close செய்து விடுங்கள் பிறகு restart செய்து விட்டு பாருங்கள் உங்கள் இணையத்தின் வேகம் அதிகமாகவும் இருக்கும் அதே போல data usage ஆனது அதிகமாக எடுத்து கொள்ளது 
  •  கீழே உள்ள வீடியோவை பாருங்கள் இன்னும் உங்களுக்கு தெளிவாக புரியும் 

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்...!!! ஏதும் சந்தேகம் இருந்தால் உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்